THIS IS A POEM COMPOSED BY ME IN MEMORY OF MY FATHER-IN-LAW. IT IS IN THE OLDEST FORM TAMIL LITERATURE KNOWN AS NAVAMANIMALAI. IT COMPRISES NINE DIFFERENT VRITTAMS IN TAMIL. THAT WHY IT IS KNOWN AS NAVAMANIMALAI
யஜ்ஞவராஹ நவமணிமாலை
நவபதியங்கு புகழ்
படைத்தன
பழமிகுபள்ளி
யொளிப்பெறுத்தன
பெருமிதமங்கு
பூரித்துயர்ந்தன
அமுதகுலத்து
மணித்துளிர்த்தன
தருமமதக்குலத்
துயரொழிந்தன
அமுதநரன் மறைத்
தழைத்துகுந்தன
மனிதகுலம் பெரு பூரிப்படைந்தன
அணிமுனிவன்
சீர்பரவத் துடித்தன
பிறவிடத்திருந்த கோள் சீர்புகொண்டன
மறையுடைத் தகம்தனில்
பண்புகொண்டன
விண்ணுடைத் தறம்பெரு
மேன்புகொண்டன
வைணவமதப் பொருள்
கண்டுகொண்டன
கருமைவிண்கணம் கடல்
தவிர்த்தன
பெருமைசீர்குலம்
மடல் விரித்தன
தூய்மை கணலது சுடர்
பொரிந்தன
வாய்மைவிப்பிரன்
பிறவி கண்டதும் (1)
மயரும்தளரு
மளவில்வித்துவத்தைக்கொண்டுதித்தனை
வடிவுகரு
மைகொண்டுதித்து வயிறதைப் பொரித்தனை
பிறவிமறை
யுருவில்நின்று பன்மை தந்தளித்தனை
அமுதனாரின்
மடியமர்ந்து மகரம் கற்றுயர்ந்தனை
தாத்தகுலம்
சீர்மையுற நடைமை கற்றுதேர்ந்தனை
சிறுவயதில் கற்று
ஓதி அத்திரியும் சேர்ந்தனை
நாவில் சொல்லுதித்த
முதல் மூவெழுத்து பழகினை
இதறநாம சொல்லறியா
வீரமாய் யிருந்தனை
தேசிகனார் வழியில்
நின்று தேசிகமும் பேசினை
உயர் இலட்சுமணார்
மார்க்கமதில் வைணவமும் பேசினை
பிரம்மவொளி
யிச்சையுற்று வித்தை பயின்றுயர்ந்தனை
வேள்விமுனி
யிச்சையதை வேதம் காத்து போற்றினை
வீரமனுவின்
சொற்படியே யாசிரமும் காத்தனை
விளையும்
பயிற்முலையில் தெரிய வித்துவமும் காட்டினை
பரந்தமுகக்
குரலுடைத்த வேதியனாய் யறிந்தனை
தருமமென பெயருடுத்த
வேள்வியின் வராகனே (2)
மறையளந்த
வழியில்நின்று வைணவத்தைப் போற்றினாய்
கரையளந்த
மண்ணவர்பால் கருணை கொண்டு பேசினாய்
நவமணியாம் தமிழொழுகி
நவநவமாய் ஓதினாய்
அருள் கொடுத்த
தைரியத்தில் வேண்ட வேண்டி வேள்வியனே. (3)
முன்வாதம்புரியவல்லா
வேள்விவாராகனார்
அறிதியிட்டு
வைணவமும் பேசுவனார்
மறைப்பாட்டொழிகி
தினம் காலம்போக்கி
கூடிக்குளிர்ந்து
மகிழ்வர் வேள்வியரே. (4)
உயிரின்பெரியவென்றுரைத்தாய்
ஏழுலகி லரியவென்ற
ளந்தாய்
தத்துமொன்று
முறையாகப்
பேசுவன்
உயர்பொருளைக் காண்பானே
நாளும் பொழுதும்
மூவெழுத்தால்
நாமம் நாராயணன் பேசி
பொருளும் தெளிந்த
நன்விப்பிரனே
மறையின் உருவாய்
வந்தவனே (5)
இராமனுசன் தந்ததொரு
வழியின் பேற்றை
மதியல்லார் பேசுவதை
கண்டு வஞ்சி
தேசிகனார் கண்டவழி
தெளியத் தேர்ந்த
வேதியனே காவலனாய்
வென்றவேந்தே
அஞ்சாத
நெஞ்சாழமடையப் பேசி
திருவாழ்வன்
மெய்யெனவே பற்றிவாழும்
வேதியனே
யருள்தருவாய் வேள்வியா யுன்
மறையோது மொழியழகு
மறவாதோரே. (6)
மறையுமுயிருமாய்
வேள்விகையுமாய்
தருமமும்நன்
நடையுங்கொண்ட
அச்சனே விண்ணோர்
மெச்சனே மண்ணோர்-
குருவே
நின்தாள்பணிந்தோம்
மெய்யும் வாயுமாய்
வாய்மை காத்தவனே
நாவலர் பள்ளியை
சார்ந்து
வளமே வென்றென்றுங்
கண்டுநின் பால்
லிருந்தேநா முனது
வடியோரே (7)
மென்சொலாவு பாவை
வாழு கீழநீர்மை குன்னமே
வரையறுத்து வளியொழித்த
வந்தண குலத்திலே
பாக்கங்கொண்ட
கேள்வி பெற்ற வந்தணப் புதல்வனாம்
பேரறிந்து
கேள்வியுற்று யர்ந்த கன்னி வல்லியின்
மென்சொலாலே பேசிபேசி
வீசபாசம் வந்தன்மால்
கைத்தளத்தை பற்றி
யேழுவடிகள் நின்ற நாயகா
தஞ்சம் மஞ்ச கொஞ்ச
வந்தபாவை கண்ட வேதியா
அக்கினிக்கு சரியைசெய்த
விண்ணவர்க்கு வினியனே (8)
விருத்தம்
கொடுத்ததும் மீதிந்தமக்களின் மேன்மதியால்
தருக்கம்வல்துறைப்
பேசிப்பழிகியபின் கன்னியரை
பொருத்தமனிதர்பால்
சேர்மையுற நின்றவேதிய, உன்
வருத்தந்
தீர்ந்ததுவால் மேன்மை கண்ட பண்பொருளே. (9)
கண்டதும் சீர்சென்னை
தடமமர்ந்து வேதப்
பண்பாடியசொல் லதனால் குடும்பமேத்தி
மண்கமழ மானகமாய்பல
வும்பேசி
தண்தமிழும்
மனக்கினியவை பெரியப் பேச்சும்
கண்டு வருள் ளப்பாவை முன்னை சேர
பின்ன வாசானி
னடியணையுஞ்சேரவாழ்ந்தாய்
இண்டைமுறை செழிய
வாய்மொழி பாவொண்று
இமையார்பதியன் தந்த
நவமணிமாலைத் தானே (10)
ஜம்முநகர்வாழ் திருவயிந்தை ஈச்சம்பாடி
இராமானுசதேவநாதன் செய்த
யஜ்ஞவராஹநவமணிமாலை முற்றும்
No comments:
Post a Comment